Wednesday, August 18, 2010

2-வது நாள்[இறையச்சம்]

                              அல்லாஹ் கூறுகிறான்:                                 நம்பிக்கையாளர்களே!உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டிருந்ததைப் போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.[அதனால்] நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.(2:183)                                                     

    அன்பானவர்களே! மனிதனின் வாழ்வு பல சூழ் நிலைகளால் சூழப்பட்டுள்ளது. தவறுகளை விட்டும் தவிர்ந்து கொள்வது என்பது மிகவும் சிரமான ஒன்றாகவே உள்ளது, இதற்கெல்லாம் காரணம்;இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு சோதனையாக படைத்துள்ளான், அந்த சோதனைகளை சிலவற்றின்மூலம் அவன் உண்டாக்கியுள்ளான்.                          

              மனமயக்கத்திற்கு காரணம் நான்கு பேர்.                            ஆம்! நாம் அல்லாஹ்வை பயந்து வாழ வேண்டும் என்று என்னதான் முயன்றாலும், சில சந்தர்ப்பங்கள் நம்மையும் மிகைத்து நிலைத்தடுமாறச்செய்து விடுகின்றன. அந்த சந்தர்ப்பங்களின் கார்ணகர்த்தாக்கள் நான்குபேர் எனலாம். 1) உலக ஆசைகள், 2)குடும்ப பாசங்கள், 3) ஷைத்தான்[என்ற நமது விரோதி], 4)நமது உள்ளம்[மனோ இச்சை], இவற்றில் நமக்கு மிகவும் ஆபத்தானது நமது உள்ளம்தான்,காரணம்; இன் நான்கில் நமது உள்ளத்தைத்தவிர மற்ற மூன்றும் நம்மைவிட்டும் தனியாக உள்ளன,ஆனால் நமது உள்ளம் மட்டுமே நம்கூடவே இருந்து குழி பறிக்கின்றது. எனவேதான் யூஸுஃப்[அலை] அவர்களின் வார்த்தைகளை அல்லாஹ் தனது அருள்மறை குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்:அன்றி "நான்(தவறுகளிலிருந்து)பரிசுத்தமானவன்"என்று என்னைப்பற்றி நான் கூறவில்லை,ஏனென்றால் நிச்சயமாக என் இறைவன் அருள் புரிந்தாலன்றி(மனிதனின்)மனம் பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது.(12:53).. நம்மைவிட்டும் நீக்கப்பட முடியாத நம் இதயத்தின் தீங்கை விட்டும் தப்பிக்கவேண்டுமென்றால்;அந்த இச்சையை நம் சொல்லைக் கேட்கும் வகையில் பயிற்சி செய்து பழக்கப்படுத்தவேண்டும். அந்த பயிற்சியின் பலன் தான்"தக்வா"இறையச்சமாகும். இந்த இறையச்சம் என்ற கேடயத்தின் மூலம் மனோ இச்சையின் தீங்குகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொண்டால் மறுமையில் இன்பமே இன்பம்தான்.இதையே அல்லாஹ் ,எவர் தன் இறைவனின் சன்னிதியில்(விசாரணைக்காக)நிற்பதைப்(பற்றி)பயந்து (தனது தவறான)மனோ இச்சையை விட்டும் தன்னை தடுத்துக்கொண்டாரோ,அவர் செல்லுமிடம் சுவனம்தான்.(79:40,41)                                                                      

                   இறையருள் இன்றி முடியாது.                                                  
தோழர்களே! இந்த இறையச்சம் என்ற பாதுகாப்பு அரண் நம் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும் மட்டும் முடியக்கூடிய ஒன்றல்ல;இவற்றுக்கும் மேலாக இறையருள் தேவை,நாம் செய்யும் முயற்சிக்கும் அந்த இறையருள் அவசியம். எனவே இந்த "தக்வா"இறையச்சத்தை அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அன்னை ஆயிஷா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஒரு முறை நபியவர்களை எனது வீட்டில் தேடினேன்,காண முடியவில்லை,கதவைத்திறந்து பள்ளிவாசலில் பார்த்தேன்,அங்கு அன்னார் பூமியில் தலைவைத்து "ஸஜ்தா" செய்த நிலையில் "அல்லாஹும்ம ஆத்தி நஃப்ஸீ தக்வாஹா,வஜக்கிஹா அந்த ஃகைரு மன் ஜக்காஹா,அந்த வலிய்யுஹா வமவ்லாஹா".(அல்லாஹ்வே!எனது உள்ளத்திற்கு (உனது)பயபக்தியைத் தருவயாக!,அதனை பரிசுத்தப் படுத்துவாயாக!,நீதான் அதன் உதவியாளனும்,மற்றும் தலைவனுமாவாய்!,) என்று துஆ(பிரார்த்தனைச்செய்து கொண்டிருந்தார்கள்.அத்தகைய பயபக்தியை,அல்லாஹ் நமக்கும் தந்தருள்புரிவானாக!ஆமீன்                               

No comments:

Post a Comment