Sunday, August 1, 2010

கருணை உள்ளங்கள்.

மனிதனாய் பிறந்தால் மட்டும் போதாது, மனித தன்மைகளோடு வாழ்ந்தோமா? என்பதுதான் வ்முக்கியம்காரணம் இதையே அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர் பார்க்கின்றான். அல்லாஹ்,தனது தூதர் நபி[ஸல்] அவர்களின் அழகிய அழைப்புப் பணியின் வெற்றிக் குறித்து கூறுகின்றான்"நபியே! அல்லாஹ்வின் அருளின் காரணமகவே நீங்கள் அவர்களிடத்தில் மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நடந்து கொண்டிருப்பீரானால்,உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்". நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அருளினார்கள்:"பூமியிலுள்ளவர்களின் மீது நீங்கள் கருணையோடு நடந்து கொள்ளுங்கள்!, வானிலுள்ள[அல்லாஹ்வான]வன் உங்களின் மீது கருணை புரிவான்
கருணையின்மொத்த உறுவமாக நபிகள் [ஸல்]      அவர்கள்  இருந்த காரணத்தினாலேயே, அல்லாஹ் அன்னாரைப் பற்றி தனது திருமறையில்"[நபியே! அகிலத்தார் அனைவருக்கும்,உம்மை நாம் அருளாக அனுப்பியுள்ளோம்.".        . ..                                             [அல்-அம்பியா:107] என்று கூறுகி அல்லாஹ்வின் இந்த அங்கீகார மொழிக்கு ஒருவிளக்கவுரையாகவே, நபிகள்நாயகத்தின்,வாழ்க்கை அமைந்திருந்தது,என்று சொன்னால் அது மிகையல்ல;  காரணம்; நபியவர்களின் வாழ்க்கை முழுவதும் மன்னிப்பு என்ற மலர்கள் சிதறிக்கிடக்க,அதனால் அன்னரின் வரலாறு வாசம் கமழ்ந்து,                மனித மனங்களை தன் பக்கம் வசீகரித்து இழுத்துக்கொண்டிருக்    கிறது. கருணைக்காட்டுவதில்,தன் குடும்பம், தன் சமூகம், தன் ஊர், தன் இனம், என்ற பாகுபாடுகளெல்லாம் அன்னாரிடத்தில் அணுவளவும் இருந்ததில்லை, அனைவரிடமும் அன்பு காட்டி அரவணைத்துக்கொள்ளும் அன்னாரது குணம், எதிரிகளையும் பணிய வைத்தது. ஏகத்துவப்பிரச்சாரத்துக்காக தாயிஃப் என்ற ஊருக்கு சென்ற      போது அன்னாருக்கு ஏற்பட்ட சொல்லமுடியா துன்பங்களை           அந்தஊர் மக்கள் தந்தார்கள்,அவற்றையெல்லாம் சகித்துக்கொண்ட நபியவர்கள்"இறைவா!இவர்கள் அறியாதவர்கள்,இவர்களை   மன்னித்து விடு! தண்டித்து விடாதே!" என்று [துஆ]பிரார்த்தனைச்செய்ததை நினைக்கும்போது மெய் சிலிர்க்கின்றன.                            தன் பேரப்பிள்ளைகளை மடியில் வைத்து முத்தம்             கொடுத்து , கொஞ்சிக்கொண்டிருந்த, நபியவர்களைப்             பார்த்து ஆச்சரியப்பட்ட ஒரு கிராமவாசி

 எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள், ஒரு பிள்ளை கூட நான் இதுவரை முத்தம் கொடுத்ததில்லை"என்று கூறிய போது,அவருக்கு பதிலளித்த அன்னார்,"உன் இதயத்தி லிருந்து அல்லாஹ் கருணையை எடுத்துவிட்டால்அதற்குநான் என்னசெய்யமுடியும்,"என்றுகூறினார்கள்.                                                 


நபிகள் நாயகம்[ஸல்] அவர்களைச்சந்திக்க வந்த ஒரு கூட்டத்            தினர் ஏழ்மையின் காரணமாக கிழிந்துபோன ஆடைகள் அணிந்திருப்பதைப்பார்த்து,கண்ணீர் வடித்த அவர்கள், அவர்களுக்            காக உதவுமாறு தன் தோழர்களிடம் அறிவிப்பு செய்து,அந்த ஏழைகளின் தேவையை நிறைவேற்றி வைத்தார்கள்.                                                       


பெரிய அத்தியாயங்களை ஓதி நீண்ட நேரம் தொழுக              வைக்க என் மனம் நாடுகிறது,ஆனால்; என் பின்னால்                நின்று,என்னைபின்பற்றுகின்றவர்களிலஇயலாதவர்கள்,வ்யோதிகர்கள்,ஆகியோரை நினைக்கிறேன், மேலும் குழந்தைகளின் அழு குரலைக் கேட்கிறேன், அவர்களின் தாய்மார்களின் உள்ளங்க வேதனைப்படும்,என்று எண்ணிசீக்கிரமாக என் தொழுகையை முடித்துக்கொள்கிறேன்" என்று நபியவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment